Home செய்திகள் யாழில் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர்! மனைவி பணம் கொடுத்தவனுடன் ஓட்டம்!! பொலிசார் முன் நடந்தது...

யாழில் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர்! மனைவி பணம் கொடுத்தவனுடன் ஓட்டம்!! பொலிசார் முன் நடந்தது என்ன?

யாழில் வர்த்தகரன கணவனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த 30 வயதான இளைஞனுடன் வர்த்தகரின் மனைவி தலைமறைவாகியுள்ளார். யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபலமான பான்சி கடை உரிமையாளரின் 36 வயதான மனைவியே தற்போது தலைமறைவாகியுள்ளார். குறித்த இளைஞனிம் 20 லட்சம் ரூபாக்களுக்கு மேல் வர்த்தகர் பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்திற்கான வட்டியும் சேர்த்து 40 லட்சங்களுக்கு மேல் இளைஞனுக்கு கொடுக்காது இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இளைஞனால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு அதுவும் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. வர்த்தகர் இல்லாத நேரங்களிலும் குறித்த இளைஞன் வர்த்தகரின் வீ்ட்டுக்கு தொடர்ச்சியாக சென்று பணத்தை தருமாறு தொல்லைப்படுத்தி வந்துள்ளார். இந் நிலையிலேயே வர்த்தகரின் 36 வயதான மனைவி தனது இரு பெண்பிள்ளைகளையும் விட்டுவிட்டு இளைஞனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மனைவியைக் காணவில்லை என பொலிசாரிம் கணவன் முறையிட்டுள்ளார். மனைவியின் தொலைபேசிக்கு பொலிசார் தொடர்பெடுத்துள்ளார்கள். அப்போது மனைவி தனது கணவனை மிகக் கேவலமாக ஏசியதுடன் தனது இரு பெண் பிள்ளைகளுக்கும் நஞ்சருந்தி தானும் இறந்து போக நினைத்திருந்ததாகவும் ஆனால் அதன் பின்னர் முடிவை மாற்றி தற்போது கணவனை விட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் கூறியதுடன் வட்டிக்க பணம் கொடுத்த இளைஞனுடன் தான் செல்லவில்லை. தனித்தே சென்றுள்ளதாக பொலிசாரிடம் கூறியுள்ளார். ஆனாலும் தனது மனைவி குறித்த இளைஞனுடன் தான் சென்றுள்ளதாக பொலிசாரிடம் கணவன் கூறிய போதும் பொலிசார் அதனை கருத்தில் எடுக்காது கணவனை திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply