சமூகவலைத்தளப் பதவினை அப்படியே தந்துள்ளோம்…
மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த 20 வயது யுவதி
மாவட்டத்தில் 23 நாளில் 16 உயிர் மாய்ப்பு மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தில் கடந்த 23 தினங்களில் 16 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம்பெற்று ள்ளதுடன் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவம் இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கவலையடைந்துள்ளனர்.
தாழங்குடா வைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுஷாலினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான நேற்று இரவு 7.15 மணியளவில் தற்கொலை செய்வதற்கு பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார். இந்த நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டதையடுத்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிசார் இணைந்து குறித்த யுவதி தோனியில் வாவியில் இருந்து கரைக்கு சடலத்தை எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
குறித்த யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சை தோற்றியவர் எனவும் காதல் விவகாரத்தால் இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த யுவதியின் தற்கொலையையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23 ம் திகதிவரை மாவட்டத்தில் 3 இளம் யுவதிகள் 75 வயதுடைய 3 முதியோர் வரை 16 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்துடன் மாவட்டத்தில் தொடர்ச்சியான தற்கொலையை அடுத்து மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் கவலையடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது
இன்று நாம் ஒரு உயிரை இழந்திருக்கிறோம். அந்த உயிர் பிரிந்த செய்தி நம் இதயங்களை கனக்கச் செய்கிறது. ஆனால், அந்த உயிருக்கு இருந்த வலியை விட, அந்த உயிர் பிரிந்ததால் எஞ்சியிருக்கும் குடும்பத்தினரின் வலி ஆயிரம் மடங்கு பெரியது.
ஏன் இந்த அவசரம்?
* பிரச்சனை இல்லாத மனிதன் எவனுமில்லை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சவால்கள் வரும். ஆனால், அந்தச் சவால்களை எதிர்கொள்வதில்தான் வாழ்வின் வெற்றியே இருக்கிறது.
* மௌனம் ஆபத்தானது உங்கள் மனக்கவலைகளை யாரிடமாவது பகிருங்கள். ஒரு சின்ன உரையாடல் ஒரு பெரிய உயிரைக் காப்பாற்றக்கூடும்.
* காலம் எல்லாவற்றையும் மாற்றும் இன்று உங்களுக்கு மலையாகத் தெரியும் ஒரு பிரச்சனை, இன்னும் சில மாதங்களில் மிகச்சிறியதாகத் தோன்றும். காலத்திற்கு அந்த ரகசியம் தெரியும்.
“உன் உயிர் உனக்கு மட்டுமே சொந்தமல்ல… உன்னை நம்பி வாழும் உன் பெற்றோருக்கும், உன் புன்னகையை நேசிக்கும் உன் நண்பர்களுக்கும் அது சொந்தம்.”
சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள்
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சோகமாக இருந்தால், அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று கேளுங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் (Listening). அறிவுரை சொல்வதை விட, “நான் உனக்காக இருக்கிறேன்” என்ற ஆறுதல் வார்த்தைதான் இன்று பலருக்கும் தேவைப்படுகிறது.
தற்கொலை என்பது ஒரு பிரச்சனையின் முடிவு அல்ல, அது பலரின் அழுகையின் தொடக்கம்.
மீண்டும் ஒரு உயிர் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. மன அழுத்தம் இருந்தால் தயவுசெய்து உதவி கோருங்கள். நீங்கள் தனியாக இல்லை!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














