சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் ‘மேரி புஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் முகத்திரை கிழிந்தது!
சுவிட்சர்லாந்து: ஈழத் தமிழ் மக்களிடையே பெரும் நம்பிக்கைக்குரிய குடும்பமாக வலம் வந்த ஆபிரகாம் குடும்பத்தினர், சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்குகளை (சுமார் 36 கோடி ரூபாய்) மோசடி செய்துவிட்டு, தற்போது புஷ்பராணி தலைமறைவாகியுள்ள சம்பவம் அந்நாட்டுத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசடியின்பின்னணி:
இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த மேரி புஷ்பராணி (புஷ்பா ஆபிரகாம் – 60 வயது) என்பவர், கடந்த 35 ஆண்டுகளாகச் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அண்டன் ஆபிரகாம் யாழ்ப்பாணம் மாதகலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். நீண்டகால வசிப்பினால் ஏற்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி,
கடந்த ஆறு ஆண்டுகளாக புஷ்பா ஆபிரகாம் பாரிய அளவிலான ‘சீட்டு’ மற்றும் வட்டித் தொழிலை நடத்தி வந்துள்ளார்.
மாதம் 500 முதல் 10,000 பிராங்குகள் வரை கட்டக்கூடிய இந்தச் சட்டவிரோத சீட்டுகளில், சாதாரண மக்கள் முதல் பெரும் வர்த்தகர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
திட்டமிட்டமோசடிமுறை:
புஷ்பா ஆபிரகாம் மிகவும் தந்திரமான முறையில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். உதாரணமாக, 15 பேர் கொண்ட ஒரு சீட்டுக் குழுவில், பொய்யாக 5 பெயர்களைச் சேர்த்து மொத்தம் 20 பேர் இருப்பதாகக் கணக்குக் காட்டுவார். இதன் மூலம் முதல் 5 மாதச் சீட்டுப் பணத்தைத் தந்திரமாகத் தானே அபகரித்துக்கொள்வார்.
பின்னர் ஏனையவர்களுக்கு வட்டி ஆசை காட்டி பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பார்.
மோசடிஆரம்பம்
2025-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எவருக்கும் பணம் தராத நிலையில், தட்டிக் கேட்டவர்களை ‘வாட்ஸ்அப்’ குழுக்களில் இருந்து நீக்கிவிட்டுத் தற்போது தலைமறைவாகியுள்ளார்
ஆடம்பரவாழ்க்கை
மக்களின் பணத்தில் உருவான வணிக சாம்ராஜ்யம்:
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஏமாற்றிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு, புஷ்பா ஆபிரகாமின் குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்:
வணிகநிறுவனங்கள்:
இவரது கணவர் அண்டன் ஆபிரகாம், யுவர்டன் (Yverdon-les-Bains) பகுதியில் ‘பிக் பீட்சா’ (Big Pizza) என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
மகள் ஸ்டெபினி ஆபிரகாம் ஜெனிவாவில் மற்றொரு doughter பீட்சா என்ற உணவகத்தைத் திறந்துள்ளார்.
இவர்களது மகன் சமீபத்தில் புத்தம் புதிய BMW சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
மறுபுறம், புஷ்பா ஆபிரகாம் தன்னை ஒரு மாற்றுத்திறனாளி எனச் சுவிஸ் அரசாங்கத்திடம் பதிவு செய்து, மாதம் 2500 பிராங்குகளை ( 9 இலட்சம் வரை) உதவித்தொகையாகப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
#வரிஏய்ப்பும்_வணிகர்களின்மௌனமும்இந்த மோசடியில் 10,000 பிராங்குகள் வரை சீட்டுப் போட்ட பெரும் வணிகர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது வருமானத்தை மறைத்து (Tax Evasion) இத்தொகையை முதலீடு செய்துள்ளதால், காவல்துறையில் புகார் அளிக்க அஞ்சி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட புஷ்பா ஆபிரகாம்,அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள்” என்ற துணிச்சலில் இந்தத் துரோகத்தைச் செய்துள்ளார்.
அடுத்தவர் உழைப்பில் சொகுசு வாழ்வு வாழ நினைக்கும் இத்தகைய நபர்களின் உண்மை முகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
மனைவி தலைமறைவான நிலையில் கணவன் அண்ரன் ஆபிரகாம் இடம் கேட்ட பொழுது சீட்டு காசை நான் வசூலித்தது உண்மை ஆனால் அதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவர் வாங்கச் சொன்னார் வாங்கினேன் என்று கூறி”வசூலித்த பணத்தைப் பற்றித் தெரியாது” என அண்டன் ஆபிரகாம் மழுப்பினாலும், ஆதாரங்களுடன் கூடிய புகார்கள் அவர் மீதும் அவரது மகள் மீதும் பாய்ந்துள்ளன.
உழைத்த பணத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களின் கண்ணீர், இந்த மோசடிப் பேர்வழிகளைச்சட்டத்தின் முன் நிறுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை
சிதைந்துபோனமக்களின்கனவுகள்:
காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்
தலைமைத்துவக் குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். குறிப்பாக, தனது மகளின் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த ஒருவர், தற்போது அந்தப் பணத்தை இழந்து மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் தவிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
சட்டநடவடிக்கை
தற்போது சுவிஸ் காவல்துறையினர் இப்புகார்களை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆதாரங்களுடன் கூடிய புகார்கள் அண்டன் ஆபிரகாம் மற்றும் ஸ்டெபினி ஆபிரகாம் மீதும் பாய்ந்துள்ளதால், இக்குடும்பத்தின் மீதான சட்ட நடவடிக்கை விரைவில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
சம்பந்தப்பட்ட மோசடி பாட்டி புஷ்பராணியின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் மோசடியில் கூட்டாக ஈடுபட்ட கணவர் மகளாகியோரின் புகைப்படங்கள் வீடியோக்கள் ஸ்க்ரீன் ஷூட்கள் நம்மிடம் இருக்கின்றது வழக்கு கோர்ட்டில் நடைபெறுவதால் பல தகவல்களை நாம் நிறுத்தி வைத்திருக்கின்றோம் பதிவு செய்யாமல்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














