Home செய்திகள் யாழில் தனக்கு மரணம் வரவில்லையே என்ற விரக்தியில் முதியவர் பலியா? புதுமையான சாவு இதுவா?

யாழில் தனக்கு மரணம் வரவில்லையே என்ற விரக்தியில் முதியவர் பலியா? புதுமையான சாவு இதுவா?

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இராசலிங்கம் (வயது 96) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதே வேளை பிள்ளை,குட்டிகள் ஒழுங்காக கவனிக்காத விரக்தியிலேயே முதியவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் ஆனால் இவ்வாறு அவர்கள் கூறி திசைதிருப்ப பாக்கின்றார்கள் என்றும் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பு! புகைப்படம் AI

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply