Home செய்திகள் இலங்கை செய்திகள் திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்! Video

திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்! Video

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026) இன்று பகல் 1.50 மணியளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் மற்றொரு நபர் மேலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து விபத்துக்கு உள்ளான மகிழுந்து காரில் காயமடைந்த நபரை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலை வந்த வாகனத்தின் சாரதியான வைத்தியர் காயமடைந்த குறித்த நபரை அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைத்துள்ளார்.
மகிழுந்து காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியர் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். விபத்து தொடர்பாக முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply