யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக சந்தேகப்பட்ட 34 வயதான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அந்த அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தரின் தாக்குதலில் மூக்கு உடைபட்ட பியோன் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது அலுவலகப் பொறுப்பதிகாரி பியோனைத் துரத்திச் சென்று தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்து சமாதானப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. அலுவலகத்தின் பெயர் நாறி விடும என்ற நோக்கிலேயே அவர் அவ்வாறு செய்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அதே வயதான திருமணமான பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் இடையில் தகாத உறவு இருந்து வருவதாக அலுவலக வட்டாரங்கள் சந்தேகத்துடன் இருந்துள்ளார்கள். குறித்த பெண் DOவின் கணவன் ஓரிரு வருடங்களுக்க முன்னர் கனடா சென்றுள்ளார். இந் நிலையில் இருவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில் ஒன்றாக கற்றவர்கள் எனவும் அதன் காரணமாக ஏற்பட்ட நட்பு தற்போது அந்தரங்கத் தொடர்பாக மாறியுள்ளதாகவும் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந் நிலையில் குறித்த ஆண் DO வுக்கு கலியாணம் முற்றாகிய நிலையில் பெண் வீட்டார் அலுவலகத்தில் வந்து தன்னை விசாரணை செய்தது தொடர்பாக அந்த அலுவலக்தில் வேலை செய்யும் பீயோன் அலுவலக வட்டாரங்களுக்கு கூறியுள்ளார். அதன் பின்னரே அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தகவல் அலுவலகத்தி்ல் பரவியுள்ளது.
ஆனால் துர் அதிஸ்டவசமாக ஏதோ ஒரு காரணத்தால் பெண் வீட்டார் திருமணத்தை குழப்பியுள்ளார்கள். இந் நிலையிலேயே குறித்த ஆண் DO அலுவலகத்தில் காலைநேரச் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொ்ணடிருந்த பீயோன் மீது நேற்று தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தரின் மூர்க்க தாக்குதல் காரணமாக சாப்பாடு சிதறிய நிலையில் மூக்கால் இரத்தம் வடிந்து கொண்டிருந்த பீயோன் அங்கிருந்து பொலிஸ் நிலையம் நோக்கி உடனடியாக சென்றுள்ளார். அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த அலுவலகப் பொறுப்பதிகாரிக்கு ஊழியர்கள் நிலமையை வெளிப்படுத்திய போத பொறுப்பதிகாரி தனது வாகனத்தை திருப்பிச் சென்று குறித்த பீயோனை மறித்து அலுவலகத்திற்கு கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.
நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் தாக்குதல் மேற்கொண்ட DO அனைவருக்கும் முன்னிலையில் பீயோனிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பீயோனின் வேண்டுகோளுக்கு இணங்க Do வை வேறு அலுவலகத்திற்கு இடமாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














