Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் தனித்திருந்த சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட சகோதரன்! சடலமாக மீட்கப்பட்டன சகோதரி!

யாழில் தனித்திருந்த சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்ட சகோதரன்! சடலமாக மீட்கப்பட்டன சகோதரி!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் பாதுகாப்பில் சடலம்
நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு இவரது சகோதரர் தொலைபேசி மூலம் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply