கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை ஏமாற்றி அவரது நகைகளை சுருட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட சமூக நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கிளிநொச்சிப் பகுதியில் செயற்படும் சமூக நிறுவனம் ஒன்றிற்கு குறித்த முதியவர் உதவி செய்து வந்ததாகவும் மற்றொரு உதவி திட்டம் ஒன்றை மேற்கொள்ள ஜேர்மனியிலிருந்து கொழும்பு வந்திருந்த குறித்த முதியவரை கிளிநொச்சிக்கு அழைத்து வருவதற்காக கட்டுநாயக்கா சென்றிருந்த குறித்த இளம் பெண் அவரை கொழும்பு கொண்டு சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்க வைத்து அவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அதன் பின்னர் அன்றிரவு குறித்த யுவதி முதியவரின் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். அதி காலை முதியவர் துாக்கம் கலைந்து எழுந்த போது அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் கொண்டு தனது நண்பர்களின் உறவுகளுக்காக அவர்கள் கொடுத்து அனுப்பியிருந்த தங்க ஆபரணங்கள், கைத் தொலைபேசிகள் போன்றவை காணாமல் போயுள்ளது. யுவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதியவர் இது தொடர்பாக கேட்ட போது கொழும்பில் தனது உறவினர் தன்னை தேடியதாகவும் அதனால் அவசர அவரசமாக அறையை விட்டு வெளியேறிச் சென்றதாகவும் ஆனால் காணாமல் போன பொருட்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து முதியவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குறித்த யுவதி பொலிசாரால் கைது செய்யபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















