இது ஓர் சமூகவலைத் தளப் பதிவாகும்….
மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரியாலையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தனது காதல் மனைவி வாணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பெண் குழந்தையுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த வருடம் யாழ்ப்பாணீஸ் க்கு பெருவாரியாக கனடா விசிட் விசா அளித்த காலத்தில், வாணியின் அக்கா கனடாவில் திருமணம் முடித்திருந்த நிலையில் அவரின் ஸ்பொன்சரில் வாணியை விசிட் விசாவில் அழைத்திருந்தார். முதலில் வாணி அங்கு சென்று அகதி அந்தஸ்து கோரிய பின்னர் மோகன் மற்றும் மகளை கனடா எடுப்பது திட்டமாக இருந்துள்ளது.
வாணி கனடா சென்று திட்டமிட்டபடி அகதி அந்தஸ்து பெற்றார், ஆறு மாதங்களின் பின்னர் அவர் வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், அவரால காசு அனுப்பப்பட்டு, மகளின் பிறந்தநாள் வெகு சிறப்பாட மோகன் ஆல் யாழ்ப்பாணத்தில் மது விருந்துடன் கொண்டாடப்பட்டது.
கடந்த சில மாதங்களாக வாணி யின் நடத்தையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் சற்று கவர்ச்சியாக உடுத்தி புகைப்படங்களை போடுவது, ரீல்ஸ் இல் ஆடுவது என தொடங்கிய வாணி , முன்னரெல்லாம் நாளுக்கு இருமுறையாவது மகளுடன் கதைத்துவந்த நிலையில் திடீரென அழைப்பும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போயுள்ளது.
இந் நிலையில் அண்மையில் வாணிக்கும் மோகனுகும் பொதுவான கனடா நண்பர் ஒருவர் மூலம் மோகனுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி கிடைத்தது. வாணி கனடாவில் அவரை விட 10 வயது குறைந்த இன்னோர் நாட்டு ஆணுடன் நெருங்கிப் பழகிவருவதாக அறிந்ததும் துடித்துப்போனார் மோகன் .

பல அழைப்புக்களின் பின்னர் அழைப்பை எடுத்த வாணி நேரடியாகவே குறித்த செய்தியை ஒத்துக்கொண்டாராம். மேலும் தனது தகுதிக்கு உன்னிடம் என்ன இருக்கிறது என்று ஆவேசமாக பேசியுள்ளாராம்.
தனது வயதான தாயுடன் தனது சிறுவயது மகளையும் வைத்துக்கொண்டு நிர்க்கதி ஆகியுள்ளார் மோகன் .
வெளிநாட்டுக் கனவால் தனது அழகான குடும்பம் சிதைந்தத்தை எண்ணி உடைந்துபோயுள்ளாராம் மோகன்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














