Home செய்திகள் யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of textMay be an image of treeMay be an image of car and text May be an image of car and text that says "l4G el B AUGFS 四王 Hи FOTON"
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here