நேற்று (18) மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற விபத்தில் சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்துள்ளார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ‘ தித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய “Rebuild Sri Lanka ” எனும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.
இவரது பாடல் தொகுப்பானது சமூக ஊடகங்களிலும் சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது.
சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.












