மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான திருமதி கஜேந்தினி சர்வேஸ்வரன் (41) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விவசாய பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோத்தராக கடமையாற்றும் இவர் தனது கடமையை சிறப்பாக ஆற்றி வந்ததுடன் சக உத்தியோகத்தர்களுடனும் புரிந்துணர்வுடன் கடமையாற்றி வந்துள்ளார் இவரது இழப்பு சக உத்தியோகத்தர்களிடையேயும் குடும்பத்தாரிடையேயும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















