Home செய்திகள் அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!

அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது ரூ. 30,000 அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No photo description available.May be an image of foodMay be an image of puffball mushroom and longanMay be an image of coconut
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here