யாழில் அரச அதிகாரிகளாக உள்ள பெற்றோரின் மகளான பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயது யுவதி போதைப்பொருள் பாவிக்கும் 23 வயதான காவாலியுடன் ஓட்டம் பிடித்துள்ளாள். குறித்த காவாலி ரிக்ரொக்கில் காதல் பாடல்களுக்கு வாயசைத்து றீல்ஸ் விடுபவன் எனவும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவன் எனவும் தற்போதும் அவனுக்கு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
பெற்றோரே பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையத்திற்கு மாணவியை ஏற்றி இறக்கி வந்த போதும் மாணவியை ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டு காதல் வார்த்தைகள் பேசி மடக்கியுள்ளான் குறித்த காவாலி. அண்மையில் மாணவியின் தாயாரின் தனது வீீட்டில் மறைவாக புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் சில காணாமல் போனமை தொடர்பாகவும் அந்த நகைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவற்றில் இருந்து சில நகைகள் எடுக்கப்பட்டு மீளவும் புதைக்கப்பட்டிருந்தததை அறிந்து மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்து விசாரணைகளை மேற்கொண்டு மாணவியின் அண்ணனான பல்கலைக்கழக மாணவன் மற்றும் தனது தந்தையான பாட்டா மீது சந்தேகப்பட்டு கடும் வாக்குவாதங்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த போதே மாணவி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளாள். அவள் வெளியேறும் போது தனது தாயார் புதைத்து வைத்திருந்த நகைகளுடன் தாயாரின் தாலிக்கொடியையும் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் மகளைத் தேட முற்பட்ட பெற்றோருக்கு மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் காதலனுடன் வாழப்போவதாகக் கூறியதுடன் நகைகளையும் தானே எடுத்துச் சென்றதாக கூறியுள்ளாள். இதனையடுத்து பெற்றோர் காதலனுடன் தொடர்பு கொண்டு கெஞ்சி மன்றாடி அவர்கள் தங்கியிருந்த கொழும்புப் பகுதிக்குச் சென்று மகளை மீட்டு வந்துள்ளார்கள். அதுவும் ஏ.எல் எடுத்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய பின்னர் திருமணம் செய்து வைப்பதாக காதலனுக்கு உறுதி மொழி கொடுத்த பின்னரே மகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்கள். இதே வேளை மகளால் களவெடுக்கப்பட்டு காதலனிடம் கொடுக்கப்பட்ட நகைகள் மீளவும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. தாலிக்கொடியில் இருந்த தாலி மாத்திரமே காதலன் திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. மகளை தனக்கு திருமணம் செய்து வைத்த பின்னரே நகைகளை தருவதாக காதலனான காவாலி கூறி அனுப்பியுள்ளான்.
அத்துடன் பொலிசாருக்கு தன்னைப் பற்றி முறையிட்டாளோ அல்லது ஊடகங்கள் மூலம் தனது புகைப்படங்களை வெளியிட்டாலோ காதலியின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் உடலுறவுக்காட்சிகளை ரிக்ரொக்கில் வெளியிட்ட பின்னரே தான் சிறைக்குச் செல்வேன் என அச்சுறுத்தியதாகத் தெரியவருகின்றது.
தற்போது மீண்டும் யாழ்ப்பாணம் வந்துள்ள குறித்த காவாலி அதி நவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை புதிதாக வாங்கி அதிலிருந்து காதல் பாடல்களுக்கு றீல்ஸ் விட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தா்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















