அண்மைய நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதியில் குரங்குகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
நகருக்குள் புகும் குரங்குகள் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளே புகுந்து அட்டகாசம் புரிந்தும் வருகிறது
இவ்வாறு நேற்று(24) மட்டு நகருக்குள் புகுந்த குரங்கு ஒன்று நேற்றிலிருந்து இன்று வரை 8 பேர் வரை கடித்து காயப்படுத்தி உள்ளது.
குரங்குக் கடிக்கு உள்ளான 8 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பி உள்ளனர்.
மட்டக்களப்பில் அதிகரித்துவரும் குரங்கு மற்றும் யானைத் தொல்லைகளிலிருந்து பொது மக்கள் மற்றும் சிறுகுழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















