Home செய்திகள் யாழ் யுவதி ஒருவர் தாய்லாந்து விடுதியிலிருந்து மீட்பு! காதலன் ஏமாற்றினானா?

யாழ் யுவதி ஒருவர் தாய்லாந்து விடுதியிலிருந்து மீட்பு! காதலன் ஏமாற்றினானா?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவர் தாய்லாந்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். தீவகப்பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த யுவதி தென்பகுதி இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவனுடன் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந் நிலையில் யுவதி பற்றிய தகவல்கள் உறவினர்களுக்கு கிடைக்காத நிலையில் யுவதி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த மாதம் யுவதியின் உறவினர் ஒருவருக்கு யுவதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுது புலம்பியதை அடுத்து யுவதியின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டிற்கு அமைவாக யுவதி தாய்லாந்தில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில் அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். யுவதியை அங்கு கொண்டு சென்று கை கழுவி விட்ட காதலன் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here