யாழில் அதிவேகமாகச் சென்று பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்!! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில்...
கனடாவில் இலங்கை தமிழ் யூரியூப்பரை கைது செய்தது கனேடியன் பொலிஸ்!! நடந்தது என்ன?
கனடாவின் டொராண்டோ நகரில் தவறான நடத்தையில் ஈடுபட்ட யூடியூபரான 45 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவர் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் முஸ்லீமான முகமத் அஸ்கார் மீது அனுமதியின்றி தனிநபர்களை அணுகி, படம் பிடித்தமை, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 டிசம்பர் 10 திகதிஅன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 8,...
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் – அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு...
இன்றைய (09.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான...
பிருத்தானியா வாழ் தமிழர்களே எச்சரிக்கை! புதிய வகை மோசடி!
பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து, அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சிறிய வீடியோக்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ்களைப் பயன்படுத்தி, சில நொடிகளிலேயே இந்தக் குரல்கள் உருவாக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் குரலில் பேசி, "நான் விபத்தில் சிக்கியுள்ளேன்" அல்லது "அவசரமாக பணம் தேவை" எனக் கூறி உறவினர்களிடம் பணம் பறிப்பதே இவர்களின் நோக்கமாகும். மோசடி எவ்வாறு நடைபெறுகிறது? குரல் சேகரிப்பு: நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோக்கள் அல்லது நீங்கள் அனுப்பும்...
பூமியின் அதிவேகக் கண்டம் – ஆண்டுக்கு 7 செ.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் அவுஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா ஒரே இடத்தில் நிலையாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒட்டுமொத்த ஆஸ்திரேலியக் கண்டமும் ஆண்டுக்கு சராசரியாக 7 சென்டிமீட்டர் வேகத்தில் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் அரை-திரவ நிலையில் உள்ள மேலடுக்கின் (Mantle) மீது, ஆஸ்திரேலியா அமைந்துள்ள பிரம்மாண்டமான டெக்டோனிக் தட்டு (Tectonic plate) தொடர்ந்து சறுக்கிச் செல்வதே இந்த நகர்வுக்குக் காரணமாகும். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய புவியியல் ஆய்வு மையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜிபிஎஸ் (GPS) நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள் அளவீடுகளைப் பயன்படுத்தி இந்த நகர்வைத் துல்லியமாகக்...
பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான அளவிலான பெரும் நிதி மோசடி சம்பவம் இலங்கையில் முதல் முறையாக வெளிச்சத்துக்கு...
சுவிஸ் சூரிச் தமிழர்களின் நகைக்கடைகளில் திடீர் சோதனை: 10 கடைகளில் மோசடிகள் கண்டுபிடிப்பு!
சூரிச் நகரில் 14 தங்க வியாபார நிலையங்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் போது 10 வணிகங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் நகைகடை ஒன்றும் அடங்கும் எனத் தெரியவருகின்றது. கண்டறியப்பட்ட விதிமீறல்கள்: சூரிச் நகரில் 14 உலோக வியாபாரிகளை ஆய்வு செய்த போது கீழ்க்கண்ட சட்ட மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன: அளவீடு செய்யப்படாத தராசுகள். ஆவணத் தேவைகளை மீறுதல். விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்குவதற்கான அனுமதி இல்லாமை. சோதனை நடத்திய குழு: சூரிச் நகர போலீஸ், மத்திய விலைமதிப்பற்ற உலோகக் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் பொருளாதார விவகார அலுவலகம்...
யாழ் பருத்தித்துறையில் ஆசிரியை மாதங்கி மரணம்! குடும்பப் பெண்களே அவதானம்!
யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வயதாண குடும்பப் பெண் மாதங்கி சிவகுமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். பெண்களுக்கு உண்டாகு புற்றுநோய்கள் தொடர்பாக அவதானத்துடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகளை 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேற்கொள்வது அவசியமாகும். பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய அல்லது பெண்களிடம் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வது விழிப்புணர்வுக்கு மிகவும் அவசியம். இவற்றை முக்கியமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த புற்றுநோய்கள் (Gynecologic Cancers) பெண்களுக்கே...
யாழில் பணச் சிக்கல் காரணமாக நிதிநிறுவனத்தில் பணியாற்றிய புருசோத் துருசில் தொங்கி மரணம்! வீடியோ
யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பக் கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது. அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர்...










