காதலனின் கண் முன்னே களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி

0

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண்,...

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் அதிர்ச்சி சம்பவம்.!

0

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் ஆலயத்தில் அதிர்ச்சி -உண்டியல்களை உடைத்து திருட்டு - (சி.சி.டி.வி. இணைப்பை துண்டித்து பதிவு கருவிகளும் திருட்டு) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் சனிக்கிழமை (01) இரவு ஆலயத்தின் பின் கதவு...

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த புஸ்பகுமார் உயிரிழப்பு.!

0

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றின் மீது ஜீப் வண்டி மோதியது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை...

யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு!!

0

யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் வீடு திரும்பவில்லை என தயார் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுவன் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் , பெற்றோருக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம்...

யாழில் ஹேரோயின் விற்று பிடிபட்ட சந்தேகநபர் பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி ஓட்டம்!!

0

சுன்னாகம் பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் (01.11.2025) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது. தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர்...

சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!! Video

0

சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து

காலியில் கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை!

0

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில்...

சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு!

0

சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன் வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்

0

மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது.