நீதிமன்ற உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில்!
பொது சொத்துக்களை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கின் கோவைகளை நீதிமன்றில் இருந்து சட்டவிரோதமான முறையில் கைமாற்றியது அதற்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் நேற்றுமுன்தினம் நீதிமன்ற உத்தியோகத்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவரை நேற்றயதினம் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார் இதேவேளை குறித்த சம்பவத்துடன்...
கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் பின்னணி இதோ! பரபரப்பு வீடியோ
கனடாவில் இலங்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலையுடன் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். டொராண்டோவை மையப்படுத்தி 2024-ஆம் ஆண்டின் கோடை காலத்தில், மூன்று 15 வயது இளைஞர்கள் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். ரிச்மண்ட் ஹில் மற்றும் ஸ்கார்புரோ உள்ளிட்ட இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்த தாக்குதல்களின் போது அவர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளில் காணொளிகளைப் பதிவு செய்து, "காணொளியைப் பதிவு செய்" மற்றும் "அது மூன்று கதவுகளை...
யாழில் வீட்டை விற்று கிடைத்த 4 கோடி ரூபாவை இழந்த விரக்தி!! இளம் பொறியியலாளர் தற்கொலை முயற்சி!!
யாழில் 29 வயதான இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அதன் போது காணிக் கொள்வனவுக்காக தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணத்தை பெற்று குறித்த காணியை நண்பனின் பணத்துடன் சேர்த்து கொள்வனவு செய்ததாகவும் பல கோடி ரூபா மதிப்பான அந்தக் காணியை வரி விலக்குக்காக நிறுவனம் ஒன்றின் பெயரிலேயே பதிந்து தொடங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இந்...
யாழில் காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என நேற்று (12) இரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த...
போதைப் பொருள் கடத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பிடிபட்டது எப்படி?
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் சோதனை சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேக நபரை பரிசோதித்ததில் அவரிடமிருந்து இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு...
அநுராதபுரத்தில் சிறுமியை சிதைத்த பிக்குவின் விந்தின் DNA யை உறுதிப்படுத்த இரத்த பரிசோதனை!!
அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்காகத் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அநுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். இரத்த மாதிரியை வழங்கியதன் பின்னர், அது தொடர்பான டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்குப் பணித்துள்ளார். நிட்டம்புவ பொலிஸார் தாக்கல் செய்த மேலதிக அறிக்கையை கவனத்தில் கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் . நீதிமன்ற உத்தரவின்படி,...
இன்று இரவு 7 மணியிலிருந்து பேஸ்புக், இன்ஸ்டா,Threads ஆகியன முடங்கியது! என்ன நடந்தது?
சற்று நேரத்திற்கு முன்பாக (இன்று மாலை 7 மணி அளவில் இருந்து) பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் மெட்டாவின் புதிய செயலியான த்ரெட்ஸ் (Threads) ஆகிய மூன்று தளங்களுமே உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கியுள்ளன. பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள்: லாக்-இன் சிக்கல்: பல பயனர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தானாகவே லாக்-அவுட் செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் லாக்-இன் செய்ய முயலும் போது "Error" அல்லது பாஸ்வேர்ட் தவறு என்பது போன்ற செய்திகள் காட்டுகின்றன. ஃபீட் புதுப்பிக்கப்படாமை (Feed Not Loading): இன்ஸ்டாகிராமில் புதிய பதிவுகள் அல்லது...
பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்று அனுமதி!
சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இளைஞனை எதிர்வரும்...
யாழில் தனது கள்ளக் காதலியுடன் கட்டிலில் நடந்தவற்றை எல்லாம் இரகசிய கமராவில் பதிவுசெய்து நண்பர்களுக்கு காட்டி மகிழ்ந்த இளைஞன்! கள்ளக் காதலியான குடும்பப் பெண் சட்டநடவடிக்கை!
திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது. வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது. யாழ்ப்பாண காதலனுக்காக, தனது கணவன், பிள்ளைகளை உதறிவிட்டு, ஓடி வந்த அந்தப் பெண், யாழ்ப்பாணத்தில் காதலனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சில மாதங்களிலேயே காதலனுடனான உறவு கசந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தானும், காதலனும் உல்லாசமாக...
கள்ளப் பாஸ்போட் மூலம் கனடா செல்வதற்காக லண்டன் விமானத்தில் ஏறிய இலங்கையருக்கு நடந்த கதி!
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குறித்த நபர் கடந்த வாரம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குடிவரவு சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு பயணப் பாதைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக...










