கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் படுத்திருந்த நிலையில் ஆணின் சடலம்!!
ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார். குறித்த நபரை இனம் கான உதவியை நாடியுள்ளார்கள் பொலிஸார்.
யாழ்ப்பாணம் வரும் புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களுக்கு நடக்கும் கொடுமை! மனைவிகளே அவதானம்!!
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஆ்ண்களைக் குறி வைத்து ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கு கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும்...
தனது மனைவிக்கு வருத்தம் என கூறி லீவு எடுத்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவில் நடத்திய விளையாட்டு என்ன? சொகுசு காரில் 5 பேர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், கைவேலி இராணுவ முகாமிற்கு அருகில் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையின் போது, இவர்கள் பயணித்த சொகுசு கார் மறிக்கப்பட்டது. புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்களுடன் குறித்த சி.ஐ.டி சார்ஜன்ட் உட்பட...
பதுளையில் கர்பிணித் தாய் ஸ்வர்ணமலாவும் சிசுவும் மரணம்!
மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரின் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய எச். எம். ஸ்வர்ணமலா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிசேரியன் மூலம் சிசு பிரசவிக்கப்பட்ட பின்னர், தாயின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக, அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை 5.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.பெண்ணின் வயிற்றில் இருந்த...
மர முந்திரிகை பொறுக்கச் சென்ற கல்லடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காவலாளிகளால் சுட்டுக் கொலை!
வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று (09) அதிகாலை இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்தில் முந்திரி பறிக்கச் சென்றபோது, அங்குள்ள காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது அவர்கள் அவரைத் தாக்கி, ஏர் ரைபிள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுட்டுக்...
இன்றைய (10.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 மிதுனம் இன்று எடுத்த...
அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல! களுத்துறையில் காதலனை வெருட்ட முயன்ற 25 வயது செவ்வந்தி பரிதாபகரமாகப் பலி!
"அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல" களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி என்ற இளம் யுவதி, தான் நீண்ட காலமாக காதலித்த நபருடன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்கு தனது காதலருடன் செல்ல இந்த யுவதி ஆசைப்பட்டுள்ளார். எனினும், காதலர் இவரை அழைக்காமல் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும், மன உளைச்சலும்...
கிளிநொச்சியில் 23 வயதான சாரங்கன் பரிதாபகரமாகப் பலி!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில், 23 வயதுடைய இளைஞன் சிவகுருநாதன் சாரங்கன் அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை தனது தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரைச் சேர்ந்த இந்த இளம் உயிரிழப்பு, அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் மனைவி, மகளுடன் ஆசிரியர் தவறான உறவு! கனடாவிலிருந்து கணவன் பொலிசாரிடம் புகார்!!
தனது மனைவி, 16 வயதான மகள் ஆகியோருடன் பிரபல யாழ் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் தவறான உறவில் ஈடுபடுவதாகவும் 16 வயதுச் சிறுமியான தனது மகளை குறித்த ஆசிரியர் பல தடவைகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அதற்கு மனைவியும் உடந்தையாக உள்ளதாகவும் கனடாவிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரின் ஒன்லைன் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் ஊடகங்களு்ககும் அவற்றை அனுப்பியுள்ளார். தனது மனைவிக்கு 39 வயது என்றும் தான் கனடா வந்து 5 வருடங்கள் ஆகின்றது எனவும் குறிப்பிட்ட குறித்த குடும்பஸ்தர் தனக்கு ஒரே ஓரு...
யாழ்ப்பாணத்தில் பிடிபட்டது சருகு புலி!! தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது! வீடியோ
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. படத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த விலங்கு கொடிப் புலி அல்லது ஆனைப் புலி என்று அழைக்கப்படும் மீன்பிடி பூனை (Fishing Cat) ஆகும். (இதன் அறிவியல் பெயர்: Prionailurus viverrinus). சிங்கள மொழியில் இதனை 'ஹந்துன் திவ்யா' (Handun Diviya - හඳුන් දිවියා) என்று அழைப்பார்கள். இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த...










