யாழ் பல்கலை சிரேஷ்ட சித்தமருத்துவ விரிவுரையாளர் தயாளினி கொலையில் இன்னொரு திருப்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன்...
ஆட்டோவுக்கு மேல் விழுந்த மரம்! மாணவன் உட்பட மூவர் பலியான நாவலப்பிட்டி விபத்து..வீடியோ
இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உப்புச்சப்பான விசயம்? யாழில் கார்கில்ஸ் food city மனேஜருர் உட்பட இருவருக்கு சிறை! நடந்தது என்ன?
கோப்பாயில் அமைந்துள்ள கார்கில்ஸ் food city யில் தரமற்ற உப்பு விற்பனை செய்த காரணத்தால் இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் கார்கில்ஸ் food cityயில் 18.02.2026ம் திகதி உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது என பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பூட்சிற்றி...
செம்மணியில் குவியல் குவியலாக என்புக்கள்!
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது இன்றைய தினம் 05 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுக்களில் 06 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட...
இன்றைய (04.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 ரிஷபம் இன்று எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்....
யாழில் இயக்கப் பாட்டு பாடிய பிரபல பாடகன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு! இயக்கத்தை மீள் உருவாக்க முற்பட்டாராம்!
எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான குறித்த இளைஞன் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியுள்ளார். அதனையடுத்து, தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, அதனை...
அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று பழுதடைந்தது! Video
அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று, தற்போது பழுதடைந்து இயங்க முடியாத நிலையில் அனலைதீவு துறைமுகத்தில் நிற்கின்றது. யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் பல வருடங்களாக ஓடி பழுதடைந்த நிலையில் நின்ற பேருந்திற்கு புதிய வர்ணம் பூசிவிட்டு, கடற்படைக்கு பெருந்தொகை பணம் கொடுத்து அனலைதீவில் கொண்டு சென்று இறக்கியிருக்கின்றனர்.
இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது: தந்தையின் துரித நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது!
காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய, கஹதூவ துடுவெகொட பகுதியில், இரண்டரை மாத வயதுடைய தனது பெண் கைக்குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாயொருவர் இன்று (02) ஏல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களின் படி, குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர் தாயார் சத்தமிட்டு கூறியுள்ளார். அதைக் கேட்டு உடனடியாக செயற்பட்ட தந்தை, கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமில்லாததாக இருந்ததால், அந்த பச்சிளம் குழந்தையின் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்...
அநுராதபுரத்தில் சம்பவம்! ஒருதலைக் காதலை நிராகரித்த வங்கி ஊழியரான 22 வயது தமிழ் யுவதி திவ்யா பக்கத்துவீட்டு காவாலியால் குத்திக் கொலை!!
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த செல்வராஜா திவ்யா (22 வயது) என்ற இளம் பெண், கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட யுவதியை அவரது அயல் வீட்டில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார். எனினும், அந்த யுவதி அவரது காதலைத் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடும் ஆத்திரத்தில், நேற்று திங்கட்கிழமை மாலை அந்த இளைஞர்...
யாழ் பல்கலை வெசாக் கூடு நாசமாக்கப்பட்டமை தொடர்பாக பேராசிரியர் என். கெங்காதரன் அதிர்ச்சித் தகவல்!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற - விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்...










