கண்டியில் 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு புதைப்பு; கள்ளக் காதலன் தலைமறைவு! வீடியோ
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ - ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ரங்கல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில், ரங்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சடலத்தை நேற்று மீட்டுள்ளனர். இவ்வாறு...
இன்றைய (03.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 7 ரிஷபம் இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள்...
யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபரின் மகன் உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலி !
யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமல்டா சுகுமார் அவர்களின் மகன் தர்சன் அற்புதராஜா உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலியாகியுள்ளார்கள். கனகராயன் குளம் பகுதியில் (பெரியகுளத்தில்) A-9 வீதியோரமாக இவர்கள் இருவரும் நடந்து வந்த போது இவர்களை வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இவர்கள் பலியானதாகத் தெரியவருகின்றது.
செம்மணி புதைகுழி – ஒன்றன் மேல் ஒன்றாக காணப்பட்ட என்பு கூடுகள்!
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டதரணி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இன்றைய அகழ்வின் போது, 08 என்புக்கூடுகள்...
உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் பரிதாப மரணம்! வவுனியாவில் சோகம்
வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி வீழ்ந்துள்ளார். இயந்திரத்தில் சிக்குண்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய கஜேந்திரன் குகப்பிரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்...
கொழும்பில் வாகனத்தால் 6 பேரை நசுக்கிக் கொன்றுவிட்டு சிரித்துக் கொண்டு நின்ற கொலைகாரச் சாரதி!! பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ!
மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய நபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.விபத்து முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தி, பின்னர் மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி வேகமாக சென்றுள்ளனர். மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் நபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சாலையில் கடும்...
யாழில் கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் இயக்கப்பாட்டுப் பாடிய பிரபல பாடகர் கைது!! வீடியோ
யாழ் நாவற்குழியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நிகழ்வின் போது நடாத்தப்பட்ட இசை நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பாடியதாக தெரிவித்து பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த hip hopசங்கி என்ற பெயருடன் ரிக்ரொகில் பாடிவரும் ஒரு பாடகரே சாவகச்சேரிப் பகுதியில் வைத்து மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தொியவருகின்றது.NPP அரசு வந்த பின் இவ்வாறு ஒரு பாடகர் கைது செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும்.
பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை பெற்றோருக்கு அனுமதி வழங்க்கியுள்ள நிலையில் ஐந்து வயதுடைய சிறு பிள்ளைகள் உட்பட பலரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், பிள்ளைகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்வதறியாது தவிக்கும் பெற்றோர் இது தொடர்பாக உள்துறை அமைச்சு சிறுவர்களுக்கு அனுப்பிய ஐந்து கடிதங்களை 'தி கார்டியன்' நாளிதழ் நேரடியாகப் பார்வையிட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் பேர்ர்த் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளரான வருணி ஆராய்ச்சி...
மீகொடை தன்சல் நிலையத்தில் கெப் வண்டியை செலுத்தி ஆறு பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சாரதி இவன்தான்!
பெயர் பிரதீப் குமார என்ற இந்த நபர் lபிலியந்தலையை சேர்ந்தவர். இன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இவரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமரில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மது போதையில் வாகனம் செலுத்துதல் உட்பட 10 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.விபத்து இடம் பெறும் போது கெப் வண்டியில் மேலும் இருவர் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம் வந்து மாமியாரிடம் கெஞ்சும் கணவன்!!
புலம்பெய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் குடும்பஸ்தர்கள் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மனைவிகள் அவர்களுடன் பெரும்பாலன விடயங்களில் ஒத்துழைப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் மூழ்கி கணவன்களை புறம் தள்ளுதல், அந்நிய ஆண்களிடம மோகம், கணவனின் உழைப்பைச் சுரண்டி இலங்கையில் உள்ள தனது உறவுகளுக்கு அனுப்பி வைத்தல், இலங்கையில் உள்ள கணவனின் குடும்பத்தை அச்சுறுத்துதல் போன்ற மிக கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கைான தமிழ்க் குடும்பப் பெண்கள் செய்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது மனைவியின் தாய்...










