தையிட்டி விகாரைப் பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது!
தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு, விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்குச் சற்று தொலைவில் காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்குச் செல்வதாகக் கூறி விகாரைப் பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர்கள் முன்னுக்குப்...
கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!
ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும் நோக்கில், உயிர் காக்கும் குழுவினர் தற்போது தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மட்டுவில் பயங்கரம்!! 11 வயதுச் சிறுமி 15 வயது அண்ணாலேயே கொல்லப்பட்டாள்! நடந்தது என்ன?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன. கைப்பேசியை (Mobile Phone) பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 15 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். குற்றத்தை...
மட்டக்களப்பில் 2 பிஞ்சு உயிர்கள் பலியான சோகம். தந்தை கைது! வெளிச்சத்திற்கு வந்த பல உண்மைகள்.
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். புற்றுநோய்’ நாடகமாடி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து இறுதியில் அப் பிள்ளைகளின் உயிருக்கு எமனாக மாறிய குடிகாரத் தந்தை கைது! அதிரடியாக செயற்பட்டு ஒரே நாளில் இச் சம்பவத்தின் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட விஷேட புலனாய்வு பிரிவினரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸாரும்.... மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் அண்மையில் இரு குழந்தைகள் அறையொன்றில் எழுந்த நச்சுப்புகையை சுவாசித்து உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், ஒட்டுமொத்த நாடே அதிர்ந்துபோகும் அளவிற்கான ஒரு கள்ளக்கடத்தல் மற்றும் ஆள்மாறாட்ட...
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மயூரன் பிருத்தானியாவில் மரணம்!
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் நவசிவாயம் மயூரன் பிருத்தானியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் வடக்கு மாகாண திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி தொழில் வாய்ப்புக்காக லண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் சிறுவர்களை அறைக்குள் அடைத்து வைத்து துஸ்பிரயோகம் செய்த 64 வயதான தமிழன் மாணிக்கம் கைது!! Video
கனடாவில் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வோன் (Vaughan) நகர சபையின் முன்னாள் ஊழியரான 65 வயதான சார்லஸ் மாணிக்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 30-ஆம் திகதி டஃபரின் ஸ்ட்ரீட் (Dufferin Street) மற்றும் கிளார்க் அவென்யூ (Clark Avenue) பகுதியில் உள்ள சமூக மையம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சமூக மையத்தில் நின்றிருந்த இரு சிறுவர்களை அணுகிய நகர சபை ஊழியர் ஒருவர், அவர்கள் சத்தம் போட்டதாகக் கூறி,...
மட்டக்களப்பில் வங்கி ஒன்றில் தீப்பரவல் – அதிகாலையில் பதற்றம்! Video
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள்...
இன்றைய (30.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக...
பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் திருட்டு குற்றச்சாட்டில் இடைநீக்கம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், கருத்துத் திருட்டு குற்றச்சாட்டில் பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த பேராசிரியர் லெஸ்லி குணவர்தன எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையை முழுமையாக நகலெடுத்து, தனக்குச் சொந்தமான படைப்பாக வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் லெஸ்லி குணவர்தன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இலங்கையின் மதிப்பிற்குரிய வரலாற்றாய்வாளர்களில் ஒருவருமாவார். இந்த விவகாரம், பேராசிரியர் குணவர்தனாவின் உறவினர் அளித்த புகாரின் பின்னர் விசாரணைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...
மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து...










