கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்! நடந்தது என்ன? வீடியோ இணைப்பு

0

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது கனடாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளமை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். 2022 ஒக்டோபர் 12ம்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறந்த கராத்தே வீரன் அனோஜன் பிருத்தானியாவில் குத்திக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!

0

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்கள் இதோ: சம்பவத்தின் பின்னணி: பாதிக்கப்பட்டவர்: அனோஜன் ஞானேஸ்வரன் (21 வயது). இவர் யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்தவர். கல்வி: கணக்கியல் மற்றும் நிதித்துறையில் (Accounting and Finance) மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஒரு திறமையான மாணவர். கராத்தே விளையாட்டில் பிளாக் பெல்ட் (Black Belt) பெற்றவர் மற்றும் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில்...

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் மாயம்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை

0

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் குறித்து எந்தவிதத் தகவல்களும் கிடைக்காத நிலையில், அவனது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டுக்காகப் புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுவனின் விபரங்கள்: பெயர்: பஸ்மின் நவீத் வயது: 13 முகவரி: பொன் நகர், கிளிநொச்சி. இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸ்...

23 வயது இளைஞனுடன் மனைவி தகாத உறவு! நேரில் கண்டு கொன்ற கணவன் கைது!

0

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா - புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், இரண்டு வாரங்களுக்கு...

பிருத்தானியாவிலிருந்து இலங்கை வந்த அலெக்ஸ் விபத்தில் சிக்கி படுகாயம்! காதலி செய்த செயல் என்ன?

0

இலங்கையில் விபத்து: நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் பிரித்தானிய இளைஞர் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில், மீண்டும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். விபத்து குறித்த விவரங்கள்: நபரின் பெயர்: அலெக்ஸ் முன்சி (Alex Munsi) வயது: 36 ஊர்: சோஹாம், கேம்பிரிட்ஜ் ஷயர் (Soham, Cambridgeshire) சம்பவம்: அலெக்ஸ் இலங்கை சென்றடைந்த சில மணி நேரங்களிலேயே 250cc மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காயங்கள்: இந்த விபத்தில் அவரது...

யாழில் ஒருவனை கொலை செய்ய ஆயத்தம் செய்த 3 பேர் உட்பட 5 பேர் வாள்கள், போதை மருந்துகளுடன் கைது!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் மற்றும் போதைப் மாத்திரைகளுடன் இருவர் இன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஒருவனை கொலை செய்தாயும் நோக்கில் வாள்களுடன்  இருந்துள்ளனர். மற்றைய இருவரும் போதை மாத்திரைகள் உடமையில் இருந்த குற்றச்சாட்டிலும் பிடி்பட்டனர். இவை  குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தவகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் இருவரை...

யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! மருமகன் சார்பாக பெண் சட்டத்தரணி சர்மினி ஆயர்!

0

யாழ் பல்கலைக்கழக சித்திவைத்தியத்துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலைச் சம்பவத்தில் முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பாக பெண் சட்டத்தரணி சர்மினி ஆயராகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பாக சிங்கள சட்டத்தரணி ஒருவா ஆயராகியுள்ளார். யாழ் நீதிமன்றில் நேற்ற நடைபெற்ற தயாளினி வழக்கில் மருமகன் சார்பாக ஆயரான லோயர் சர்மினி, தனது கட்சிக்காரர் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவரை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் பிழையான நபராக காட்டுவதாகவும் ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றில்...

யாழில் வீடுகள் மீது தனிநபர் தாக்குதல்! மக்கள் அச்சம்!

0

யாழில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குக் கட்டைக்காடு பகுதியில் நேற்றுமுன்தினம்(15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் நபர் ஒருவரால் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், வீட்டின் உடமைகள், கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். குறித்த நபர் அப்பகுதியில் பல நாட்களாகக் குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகவும் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை உடனடியாகக் கைது செய்யுமாறு...

மன்னார் முருங்கனில் றெமியைக் காணவில்லை! பொலிசாரிடம் முறையீடு!

0

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என இன்றைய தினம் வியாழன்(16) முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி (வயது 48 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போய் இருப்பதாக அவரது சகோதரியினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(15) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்...

வவுனியாவில் நகர் பகுதியில் இருந்த சடலத்தால் பரபரப்பு!

0

வவுனியா - கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக இன்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது. அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.