பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்!

0

பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி இன்று காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் நாளை காலை இடம் பெறும்..  

மட்டக்களப்பில் பயங்கரம்! புதையலுக்காக 3 தலைமுறையாக பிறந்த முதல் ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முற்பட்ட பிரதேசசெயலக கணக்காளர் உட்பட 9 பேர் கைது!

0

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இரவு, மண்முனை பிரதான...

யாழில் அதி வேகம்!! உருண்டு புரண்ட வாகனம்!

0

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பத்துடன் மோதியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.  7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் சித்திரா எங்கே? கணவன் தேடுகின்றார்!

0

இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்... புதுக்குடியிருப்பு மாணிக்கபுரத்தினை சேர்ந்த குடும்பப் பெண்ணை கடந்த 6 நாட்களாக காணவில்லை என அவரது உறவுகள் தேடுகின்றார்கள். காளிமுத்து கமநாயகி (சித்திரா) வயது 48 மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர், உறவுகள் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை, இவரை கண்டால் தெரியப்படுத்துங்கள். கணவன் - 074 27 23 167 மகன் - 077 39 16 208

36 வயதாகியும் கலியாணம் நடக்கவில்லை! யாழில் பட்டதாரி பெண் அலுவலர் எடுத்த முடிவு!

0

யாழில் 36 வயதான பட்டதாரியான பெண் அலுவலர் தனது அரசவேலையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கா இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணவசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த குறித்த பெண் அலுவலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருப்பதாகத் தெரியவருகின்றது. இதனால் இவருக்கு திருமணம் கைகூடவிலலை எனவும் இதன் காரணமாக விரக்தியில் இருந்துவந்த குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரனிடம் இந்தியாவு்ககு சுற்றுலா செல்வதாக கூறி இந்தியா சென்றபின் மீண்டும் திரும்பி வரவில்லை எனத் தெரியவருகின்றது. தாய் மற்றும் உறவுகள் குறித்த பெண்ணை தொடர்பு...

பிருத்தானிய தமிழ் தொழிலதிபர் யாழ்ப்பாண பாடசாலைக்கு செய்த நற்செயல்!

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சீவரத்தினம் முரேஷ், தனது கல்லூரிக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புதிய Mitsubishi Fuso பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2026 பெப்ரவரி 27 அன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், இப்பேருந்து கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. தனது அன்புத் தாயார் திருமலரின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது நினைவைப் போற்றும் வகையில் சீவரத்தினம் முரேஷ் இந்த உன்னத...

யாழில் அண்ணணைக் காணவில்லை என தேடிய தங்கச்சிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 5 முறை நடந்த சம்பவம்!

0

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார்  8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இரவு 10.00 மணி கடந்தும் அவர் வீடு திரும்பாததால்,...

இன்றைய (12.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று நீங்கள் சாதனை புரிவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை குறையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வீடு கட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குண்டான ஆலோசனைகள் நடக்கும். பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 மிதுனம் இன்று நண்பர்களிடம் மிகவும்...

யாழ் பெற்றோரே அவதானம்!! தங்கச்சியின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த 16 வயது மாணவன்!

0

தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப்பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர்ப்குதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன். நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்க பூப்புனிதநீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிரு்து கழற்றி எடுத்து வைத்துள்ளான். அடுத்தநாள் தங்கை உட்பட...

இன்று முதல் QR கோட் தேவையில்லை; பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேரடியாக எரிபொருள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CPC தெரிவித்துள்ளது.