காலியில் மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் துாக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்!! வீடியோ

0

காலி படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்று*விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டெடுத்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவராவார்.

கனடாவில் உயர் கல்வி கற்றுவரும் மாணவன் கட்டுநாயக்காவில் கைது!

0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால்...

கிளிநொச்சியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது!

0

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, சம்பவம் குறித்து உண்மையை உறுதிப்படுத்திய பின், பிரதேச மக்கள் உரிய முறையில் சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்!

0

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுடன் யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டிருப்பது, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகின் மிகவும் நம்பகமான பயண...

உடலில் இரத்தக்கசிவுடன் நிர்வாண நிலையில் மர்மமாக வீட்டினுள் சடலமாக கிடந்த பெண்!

0

காலியில் பத்தேகம - மஹாலியனகேவத்த பகுதியில் நேற்று (26) இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர், பத்தேகம, சந்தரவள பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டில் தனியாக வசித்துவந்த குறித்த பெண், பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ள நிலையில் வீட்டில் விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் இருப்பதாக பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பத்தேகம பொலிஸார் குறித்த வீட்டை சோதனை செய்தபோது, குறித்த பெண் வீட்டின் தரையில் நிர்வாணமாகக் கிடந்துள்ளதுடன், அவரது...

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் இன்று நடந்த விபத்தில் ஹயஸ் வாகன சாரதியின் கொலை வெறி……Video

0

இன்று யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் இன்று நடந்த விபத்தில் ஹயஸ் வாகன சாரதியின் கொலை வெறி…… ன்றையதினம் யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உந்துருளியில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில் இருந்து வந்த ஹயஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் உந்துருளி பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம் சேதமடைந்துள்ளது.விபத்து...

$102 மில்லியன் மாயம்! – பாரிஸின் அருங்காட்சியகத்தில் உலகின் அதிர்ச்சியூட்டும் கொள்ளை -நெப்போலியன் கிரீடங்கள் 7 நிமிடத்தில் திருடு

0

அக்டோபர் 19, 2025 அதிர்ச்சியில் உறைந்த பாரிஸ்  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரு அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கடந்த ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 2025 அன்று, அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் (Daring Heist) சம்பவம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் கலை உலகையும் ஆழமான அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வருடாந்திரமாக எட்டு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிறுவனத்தின் மையத்தில், பிரான்ஸ் காலனித்துவ காலத்தின் விலைமதிப்பற்ற அரச கிரீட நகைகள் உட்பட பல பொக்கிஷங்கள், கண் இமைக்கும் நேரத்தில் மாயமாகியுள்ளன. உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில்...

யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

0

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மணல் கொள்ளையர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவன் படுகாயம்!!

0

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர். இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாலாவி தெற்கு  கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன்...

பெற்றோல் பௌசரை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் தலை நசுங்கிப் பலி!! CCTV Video

0

பெட்ரோல் ஏற்றி சென்ற பௌசரை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞன் சில்லுக்குள் சறுக்கி விழுந்து தலை சிதறி உயிரிழப்பு.. கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மல்வானை இளைஞன் உயிரிழந்துள்ளார். மழை காரணமாக முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் சறுக்கியத்தில் அருகில் வந்த பௌசருக்குள் விழுந்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.