அமேசான் சர்வர் மீது ஈரான் நடத்திய பயங்கர தாக்குதல் – காணாமல் போன கோடிக்கணக்கான தகவல்கள்! உங்கள் டேட்டா பாதுகாப்பானதா?
தாக்குதலின் பின்னணி: ஏன் அமேசான் இலக்காக மாறியது? பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது டிரோன் மற்றும் ஏவுகணைகளை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு தளங்களை நோக்கித் திருப்பியது. அமேசான் நிறுவனத்தின் தரவு மையங்கள் (Data Centers) உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)...
இலங்கையில் கொடூரம்! பிரேத அறையில் கிடந்த யுவதியின் சடலம் மீது 3 சிற்றுாழியர்கள் மாறி மாறி துஸ்பிரயோகம்!
க்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன்...
இன்றைய (03.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...
ஈரானால் பதற்றநிலை -போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும்
மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு "ஆபத்தான பதற்றநிலை" என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எச்சரித்துள்ளன. குவைத் வெளிவிவகார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபடாத நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பொறுப்பற்ற செயலாகும் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா...
இலங்கை அவசரகால நிலை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டது!
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…. இங்கே அழுத்தவும்
ஈரானின் 99% இணையம் முடக்கம் – உலகப் பொருளாதாரம் சரிவு – வளைகுடா நாடுகளில் வெடிக்கும் ஏவுகணைகள் – தாக்கப்பட்ட எண்ணெய் கப்பல்கள்
தேதி: மார்ச் 2, 2026 போரின் தொடக்கம்: ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) 2026 பிப்ரவரி 28 சனிக்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீது பாரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் அணுசக்தி மையங்கள், ஏவுகணை தயாரிப்பு தளங்கள் மற்றும் உளவுத்துறை தலைமையகங்களை இலக்கு வைத்து 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா இதனை "தற்காப்பு நடவடிக்கை"...
மீண்டும் வருகிறது அவசரகால சட்டம்! மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? மத்திய கிழக்கு போர் இலங்கையை பாதிப்பது எப்படி?
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள எரிபொருள் வரிசைகள் ஆகியவற்றைச் சமாளிக்கும் நோக்கில், இலங்கையில் மீண்டும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். பின்னணி: ஏன் இந்தத் திடீர் முடிவு? கடந்த ஜனவரி மாதம் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களைச் சீர்செய்யவும், அத்தியாவசிய சேவைகளை ஒருங்கிணைக்கவும் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டது. எனினும், அந்த...
இன்றைய (02.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக...
யாழில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை...
உலகின் கழுத்தை நெரிக்கும் ஈரான்! உயரப்போகும் பெட்ரோல் விலை! அந்த ஒரு நீரிணை உலகப் பொருளாதாரத்தை …
மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மிக முக்கிய திருப்புமுனையாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளது. உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்யும் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை மூடல்: ஈரானின் அதிரடி அறிவிப்பு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி,...









