Home செய்திகள் யாழில் அடையாள அட்டை இல்லை என கூறி வீதியில் நின்ற அப்பாவி குடும்பஸ்தருக்கு பொலிசார் செய்த...

யாழில் அடையாள அட்டை இல்லை என கூறி வீதியில் நின்ற அப்பாவி குடும்பஸ்தருக்கு பொலிசார் செய்த கொடுமை!

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர்.

குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை வீதியில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை அழைத்து விசாரித்து , தேசிய அடையாள அட்டையை கோரினார்.

அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால் , பேர்ஸ் எடுத்து வரவில்லை அருகில் தான் வீடு எடுத்து வந்து தருகிறேன் என கூறிய போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் பொலிஸார் இழுத்து ஏற்றினார்கள்.

அப்போதும் தனது வீட்டிற்கு அருகில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் வாசிக்கின்றார். அவரிடம் தன்னை பற்றி விசாரியுங்கள் என கூறி அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க முற்பட்ட போது கையடக்க தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்.

வீட்டில் மனைவிக்கு அழைப்பு எடுத்து அடையாள அட்டையை எடுத்து வருமாறு கூற தொலைபேசியை தருமாறு கோரிய போதிலும் பொலிஸார் தொலைபேசியை கொடுக்கவில்லை..

அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , அங்கு விசாரணைகளை முன்னெடுத்து , சிங்களத்தில் எழுதிய தாள்களில் கையெழுத்து வாங்கி , இரண்டு கைகளின் அடையாளங்களையும் பெற்று , உடம்பில் உள்ள அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply