கிளிநொச்சி வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு நீதியான விசாரணையை கோரும் உறவுகள்
கடந்த 21/10/2026 செவ்வாய்க்கிழமை
கிளிநொச்சி கொமர்சல் வங்கிக்கு முன் வெள்ளைக் கோட்டில் பாதையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை அதிவேகமாக பயணித்த கார் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிரதேச வைத்தியசாலையான மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 25/10/2026 ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் இரவு 8.00 மணியளவில் இறைபதம் அடைந்து விட்டார்; அவரை மிக வேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு சட்டத்தரணி ( Lawyer ) என்று அறிய முடிகிறது; அத்துடன் அவர் நெஞ்சுக்குத்து என்று கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று அறிய முடிகிறது; எனவே இது சம்பந்தமாக தமக்கு நீதியான விசாரணை வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டு நிற்கின்றனர்
பொன்னம்பலம் குருக்கள் சுபாஸ்கந்தன்
( வயது 51) அவர்களின் இறுதிக் கிரியைகள் 28 /10/2026 புதன் கிழமை 10.00 மணியளவில் பருத்தித்துறை மருதடியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















