யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் இணுவில் பகுதியை கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்
குறித்த முதியவர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பின்னால் வந்த டிப்பர் ஆவது மீது மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவத்தினை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாக பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















