Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் 35 வயதான ஆசிரியருடன் சந்தோசமாக இருந்த 45 வயது ஆசிரியை!! மலசலகூடத்தில் மறைந்திருந்த போது...

யாழில் 35 வயதான ஆசிரியருடன் சந்தோசமாக இருந்த 45 வயது ஆசிரியை!! மலசலகூடத்தில் மறைந்திருந்த போது ஆசிரியரின் மனைவியால் பிடிக்கப்பட்டு தாக்குதல்!! தலைமுடியும் வெட்டப்பட்டது!!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். கண்கள் மற்றும் வாய்ப்பகுதி வீக்கமாக உள்ள நிலையில் வலது கண் பார்வைக் குறைபாடு ஏற்படும் அளவுக்கு காயபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 42 வயதான குறித்த குடும்பப் பெண் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை எனவும் நல்லுார் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் வைத்த ஆசிரியை பிடிக்கப்பட்டு வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது உறவுகளால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

வீட்டு உரிமையாளரான பெண்ணும் அரச ஊழியர் எனவும் அவரது கணவன் வலிகாமம் பகுதியில் உள்ள இன்னொரு பாடசாலையில் கற்பித்து வருகின்றார் எனவும் தெரியவருகின்றது. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை விஜயதசமியன்று பகல் வேளையில் நல்லுார் பகுதியில் உள்ள தனது நண்பனான ஆசிரியர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பல தடவைகள் பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது நண்பனிடம் இவ்வாறு வந்து சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

நண்பனின் மனைவி மதிய நேரம் அரச அலுவலகத்தில் இருந்து வீடு வந்து பின்னர் அலுவலகம் சென்ற பின்னரே தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை பல தடவைகள் இவ்வாறு தனது ஆசிரிய நண்பனை சந்திக்க வந்து சென்றுள்ளார்.இது தொடர்பாக மனைவி ஏதோ ஒரு விதத்தில் அறிந்து சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த ஆசிரியை வீட்டில் வந்து நின்ற போது திடீரென அங்கு மனைவி வந்துள்ளார். வீட்டு கேற்றை பூட்டிய வாறு உள்ளே கணவனும் ஆசிரியையும் நின்றுள்ளனர். நீண்ட நேரமாக வீ்ட்டுக்கு வெளியே நின்று மனைவி கணவனை அழைத்த போதும் கணவன் வருவதற்கு தாமதித்துள்ளார். இதனையடுத்து மனைவி தனது உறவுக்காரர்களை அங்கு அழைத்து வந்து மதில் பாய்ந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார்கள். அந் நேரத்தில் வீட்டு வளவில் பெண்களின் மோட்டார் சைக்கிளை அவதானித்து ஒவ்வொரு இடமாக மனைவியும் உறவினர்களும் தேடுதல் நடாத்தியுள்ளார்கள். இந் நிலையில் வீட்டின் வெளி மலசல கூடத்தில் மறைந்திருந்த ஆசிரியை பிடிபட்டுள்ளார். அதன் பின்னர் மனைவியாலும் உறவினர்களாலும் ஆசிரியை நையப்புடைக்கப்பட்டதுடன் தலைமுடியும் அறுக்கப்பட்டு ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை வீதியில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அத்துடன் தனது கணவன் மீதும் மனைவி தாக்குதல் நடாத்தியுள்ளார்.

மனைவியால் தாக்குதலுக்குள்ளான ஆசிரியை அப்பகுதியில் நின்றவர்களிடம் ”தன்னிடம் குறித்த ஆசிரியர் 8 லட்சம் ரூபா கடன் வாங்கியதாகவும் அதனை திருப்பித்தருமாறு கேட்டும் தராத காரணத்தால் பல தடவைகள் வீடு தேடி வந்து கடனைக் கேட்டதாகவும், தன்னிடம் கடன் வாங்கியது ஆசிரியரின் மனைவிக்குத் தெரியும் எனவும் கடனை கட்டாமல் மறைப்பதற்காக இவ்வாறு தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் கூறி தான் பொலிஸ் நிலையம் செல்லப் போவதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தபடி கத்திக் குளறியுள்ளார்.

இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது மனைவியிடம் அடி வேண்டியபடியே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளாகி காயப்பட்டிருந்த குறித்த ஆசிரியையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஓட்டம் பிடித்துள்ளார். அங்கிருந்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு ஆசிரியையை கொண்டு சென்றதாகவும் அங்கு சென்ற அவர்களைப் பின்தொடர்ந்து ஆசிரியரின் மனைவி மற்றும் உறவுகளும் சென்று வைத்தியசாலையிலும் கலவரம் செய்ய முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து பொலிசாரை அழைப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் முயன்ற போதே மனைவி உட்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை கணவனை விவாகரத்து செய்து வாழ்பவர் என்பதுடன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் எனவும் இரு பெண் பிள்ளைகளின் தாய் எனவும் தெரியவருகின்றது.

ஆசிரியர் தம்பதிக்கும் 4 வயது மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளது என்பதுடன் அவர்கள் மாலை வரை மனைவியின் தாயார் வீட்டில் நிற்பது வழக்கம் எனவும் தெரியவருகின்றது.

ஆசிரியை தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் சிலரால் எமக்கு அனுப்பட்டுள்ளன. குறித்த ஆசிரியையும் பெண் அலுவலரின் கணவனான ஆசிரியையும் இனிவரும் காலமாவது திருந்தி நடப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை நாம் பிரசுரிக்கவில்லை.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply