Home செய்திகள் யாழ் திருநெல்வேலி சந்தியில் ஒருவர் பட்டப்பகலில் வெட்டுக்கொலை !

யாழ் திருநெல்வேலி சந்தியில் ஒருவர் பட்டப்பகலில் வெட்டுக்கொலை !

யாழ்ப்பாணத்தில் ஒருவர் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி பகுதியில் இன்று (30) காலை இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்தது. தனது மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் வாளால் வெட்டினர். பாதிக்கப்பட்டவர் இறங்கி தப்பியோடிய போது, விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர். அவரது ஒரு கால் துண்டாடப்பட்டது. இரண்டு கைகள், வயிற்றிலும் வெட்டப்பட்டார். நேசராசா ரஜீவ் (35) என்பவரே உயிரிழந்தார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லையென குறிப்பிடப்படுகிறது.

பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் குழு மோதலின் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்துள்ளது. மற்றொரு ரௌடிக்குழுவை சேர்ந்த ஒருவர், இரண்டு நாட்களின் முன்னர் உயிரிழந்தவருக்கு குறுஞ்செய்தியில் மிரட்டல் விட்டிருந்ததாகவும், அதில் இரண்டு நாட்களுக்குள் கொலை செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here