Home செய்திகள் செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !

செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !

இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 365 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில், ப்ளானட் லெப்ஸ் (Planet Labs) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் களனி கங்கை பெருக்கெடுத்துப் பாய்ந்து கொழும்பு உள்ளிட்ட பெரும் பகுதிகளை மூழ்கடித்து, பாரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதை காட்டுகிறது.

எவ்வாறாயினும், களனி ஆற்றில் நீர்மட்டம் குறைவடைந்து தாழ்நிலப் பகுதிகளில் நிலவிய வெள்ள எச்சரிக்கை நீங்கியுள்ளதுடன், நாகலகம் வீதியில் மாத்திரம் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அத்துடன், மல்வத்து ஓயாவை அண்டிய தந்திரிமலை பகுதியில் சிறு வெள்ள நிலைமை நிலவுகின்ற போதிலும், அங்கு நீர்மட்டம் குறைவடையும் போக்கு காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் எந்தவொரு ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அனர்த்தத்தின் போது..

செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !


அனர்த்தத்திற்கு முன்…
செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !

 

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here