Home செய்திகள் புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டியவர்கள் கைது!!

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டியவர்கள் கைது!!

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர்கள் 35 முதல் 48 வயதுக்குட்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட, கலேவெல, மடாடுகம மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here