கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த முஜாஹித் முஹம்மது சஹ்ரின் (வயது-20) என தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ,சம்பவ தினம் சிகை அலங்கரிப்பு (தலை முடி வெட்ட) சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவரும், தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான பொடி சுரேஷ் என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்த புளூமெண்டல் ரவி என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறப்படும் பழனி சகோதர்கள் / பழனியின் குடும்பத்தினரினால் தமது உதவியாளர்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட சிகையலங்கார நிலையம் (Saloon) ஒன்றின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடம் ஜின்துப்பிட்டி வீதி, கொழும்பு 13 இல் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் என தெரிவிக்கப்படுகின்றது.
சலூன் உரிமையாளர் உட்பட நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 20 வயதான மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













