Home செய்திகள் இலங்கை செய்திகள் மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!

மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!

காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி [ MBBS ] அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார்
அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவரின்   திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  பலரும் இஅரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply