யாழ் திருநேல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரம் விளையாடிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட சிலர் அங்கு வந்த சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வான் உட்பட்டவற்றில் வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய குழு குறித்த வீட்டில் நின்றிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்டவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட போது குறித்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்கள். தப்பி ஓடிய மாணவர்களில் ஒருவரை துரத்திப் பிடித்த கும்பல் அந்த மாணவனை நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் 17 வயதான யாழ் நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவரை பல தடவைகள் அதே வீட்டுக்கு கொண்டு வந்து சந்தித்துள்ளதாகவும் அந்த மாணவி கர்ப்பமடைந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடு மாணவியினால் அடையாளம் காட்டப்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன் பின்னரே அந்த வீட்டில் நின்றிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவியை கர்ப்பமாக்கியதாகச் சந்தேகிக்கபடும் அம் மாணவனை நையப்புடைத்தவர்கள் தமது வாகனத்தில் அவனை இழுத்துச் சென்று ஏற்றிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
புலம்பெயர் தமிழன் ஒருவனுக்குச் சொந்தமான குறித்த வீட்டில் பல்கலைக்கழக காவாலிகள் பலர் தங்கியிருப்பதுடன் அங்கு பல யுவதிகளை பல்கலைக்கழக மாணவ நண்பிகள் என்ற போர்வையில் பல தடவைகள் அவர்களில் பலர் அழைத்து வருவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.












