யாழில் 36 வயதான பட்டதாரியான பெண் அலுவலர் தனது அரசவேலையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கா இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணவசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த குறித்த பெண் அலுவலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருப்பதாகத் தெரியவருகின்றது. இதனால் இவருக்கு திருமணம் கைகூடவிலலை எனவும் இதன் காரணமாக விரக்தியில் இருந்துவந்த குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரனிடம் இந்தியாவு்ககு சுற்றுலா செல்வதாக கூறி இந்தியா சென்றபின் மீண்டும் திரும்பி வரவில்லை எனத் தெரியவருகின்றது. தாய் மற்றும் உறவுகள் குறித்த பெண்ணை தொடர்பு கொண்ட போது தான் இந்தியாவில் உள்ள முக்கிய பெண்கள் துறவற மையத்தில் சேர்ந்துள்ளதாகவும் இனிமேல் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டாம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். தற்போது குறித்த பெண்ணின் உறவுகள் அப் பெண்ணை மீட்டெடுப்பதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














