இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
படிச்சி பல்கலைகழகம் போய் பட்டம் பெற்று கணக்காளராக வந்து சலவை தொழிலாளியிடம் போய் இலஞ்சம் வாங்குகின்றீர்களே!
ஒரு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் யாரிடம் இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்? என்பதனை அறிந்து போது வேதனையாக இருந்தது.
வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட துணிகளை சுத்தம் செய்து விநியோகித்து வரும் ஒப்பந்தத்தை பெற்றவரிடம் இலஞ்சம் வாங்கிய போதே கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக நடந்தாகவும் ஆனால் இன்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
வைத்தியசாலை துணிகள் என்பது தொற்றுகளால் நிறைந்தவை. அவை ஆபத்தானது. அதனை சுத்தம் செய்யும் பணிகளும் ஆபத்தானது.இந்த நிலையில் குறித்த தொழிலாளிகள் இவறையெல்லாம் கடந்து வைத்தியசாலையால் வழங்கப்படுகின்ற ஆடைகள் உள்ளிட்ட துணிகளை அள்ளிச் சென்று சுத்தம் செய்து மீளவும் இவர்களிடம் கையளிக்கின்றனர். ஆனால் இந்த துணிகளை தொடவோ அதனருகில் செல்லவோ விரும்பாத இவர்கள் அந்த தொழிலாளியிடம் இருந்து எப்படி பணத்தை மட்டும் பெற்றுக்கொள்ள மனம் வந்தது?
இப்படி பணத்தை இலஞ்சமாக பெற்று அதனை உங்கள் பிள்ளைகள், குடும்பத்திற்கு செலவு செய்யும் போது உங்கள் மனசாட்சி ஒரு போதும் உருத்தியது இல்லையா?
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















