Home செய்திகள் கொழும்பில் தீயில் கருகி தாயும் மகளும் பலி! திட்டமிட்ட கொலை என சந்தேகம்! Photos

கொழும்பில் தீயில் கருகி தாயும் மகளும் பலி! திட்டமிட்ட கொலை என சந்தேகம்! Photos

கொழும்பு மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகிய இருவருமே பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தீ பரவுவதைக் கண்ட அயலவர்கள் உடனடியாகச் செயற்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
காயமடைந்த ஆண்களை வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர், வீட்டைச் சோதனையிட்டபோது ஒரு அறைக்குள் தாயும் மகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்..
சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No photo description available.May be an image of kangaroo, chipmunk, slow loris and wallabyNo photo description available.May be an image of one or more people, slow loris and text
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply