Home செய்திகள் மின்னல் தாக்கியதில் சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் பலி!! Video

மின்னல் தாக்கியதில் சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் பலி!! Video

இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளே பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மின்னல் தாக்கி ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of childNo photo description available.May be an image of one or more people, people smiling and text

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here