Home செய்திகள் மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட ஹயஸ் வாகனம்! Video

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட ஹயஸ் வாகனம்! Video

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் பிரண்டு வீதியை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளது
கொழும்பு நோக்கி மக்களை அழைத்துச் சென்ற குறித்த வாகனம் அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
இதன் போது இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்திருக்கின்ற நிலமையில் தெய்வாதீனமாக சிறிய ஒரு காயத்துடன் மாத்திரம் சாரதி தப்பியுள்ளார்
சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here