Home செய்திகள் இலங்கை செய்திகள் கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

குறித்த பகுதிக்கு இன்றைய தினம் சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலையினை அங்கு வைத்து வழிபாடுகளை மேற்கொள்வதுடன் , “பிரித்” ஓதி சமய சடங்குகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் , அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன

சிலை நிறுவதற்கோ , புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளவே , பிரதேச சபையிடமோ , தொல்லியல் திணைக்களத்திடமோ எவ்வித அனுமதிகளும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்றைய தினம் அங்கு வைத்து வழிபாடு செய்யும் புத்தர் சிலையானது , நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு எடுத்து செல்லப்பட்டு , அங்கு பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிய முடிகிறது.

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!

 

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!

 

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!

 

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்!
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply