Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் அதி வேகமாகப் பறந்த இரு இளைஞர்கள் சிதறிப் பலி!

யாழில் அதி வேகமாகப் பறந்த இரு இளைஞர்கள் சிதறிப் பலி!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீடியோவிற்கு கீழே உள்ள இரு இணைப்புக்களையும் அழுத்தவும்

05AB66B3-57D2-460E-A7AC-CE32DEC2660C

38303EE1-041D-439C–4BBC4DDA528F

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply