Home செய்திகள் இலங்கை செய்திகள் பூநகரியில் 14 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் & ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுப் பரபரப்பு! கடத்தியவன் தப்பி...

பூநகரியில் 14 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் & ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுப் பரபரப்பு! கடத்தியவன் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட வீதித் தடை சோதனையின் போது பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் வீதி, பூநகரி பாடசாலைக்கு அருகில்நேற்று இரவு (02) வீதித் தடை சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.

சைகையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், தான் வைத்திருந்த பொதியை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு 2 மோட்டார் சைக்கிள்களிலும் தப்பிச் சென்றுள்ளனர்.

கைப்பற்றபட்ட பொதியில் 14 சிறிய பொதிகளுக்குள் அடைக்கப்பட்ட்ஹெரோயின் 13 கிலோ 340 கிராம்
ஐஸ் போதைப்பொருள் 01 கிலோ 62 கிராம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்ய பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply