கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல் !

0

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (04)...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...

உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி 4 ஆண்டுகளாக பா லி ய ல் வன்புணர்வு! அம்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

0

உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயதான சகோதரி கர்ப்பமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன், தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாகத் தெரியவந்துள்ளது. சகோதரனுக்கு சுமார் 11...

மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இராணுவ சிப்பாயை கொ லை சிப்பாய்

0

தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார். மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில்...

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை!! கணவனும் குழந்தையும் மாயம்!!

0

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமானது எப்படி..? ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை

0

கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும்...

அவுஸ்ரேலியாவிலிருந்து வந்து கேகாலையில் ஒன்றாக உயிர் நீத்த காதல் தப்பதிகள்!! நடந்தது என்ன?

0

கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி  கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர். எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார்....

யாழ் விபத்தில் தலை நசுங்கிப் பலியான இளம் கலைஞர் வசந்தன் என்பவர் கடைசியாக ஆடிய ஆட்டம்!! வீடியோ

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் கலைத்துறையைச் சேர்ந்த வசந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு கலைத்துறையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. தற்போது அவர் ஆடிய ஒரு ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை அப்படியே தந்துள்ளோம்.

யாழில் பெண்ணிடம் சங்கிலி அறுத்த கொள்ளையன் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்!!

0

நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று(01) அறுத்துச் சென்றுள்ளார். அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து வர்த்தக நிலைbreakயத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் இன்று...

எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யும் சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!

0

சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும். இதனால் எலும்பு முறிவினால்  பாதிக்கப்பட்டவர்கள் தமது  அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், ‘Bone-02’ பசை 3 நிமிடத்தில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடக்கூடியது என்று விஞ்ஞானர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில் 150 பேருக்கு இதன் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும், எனவே தற்போதைய...