யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சித் தகவல் ; பின்னணியில் பிரபல கட்சியின் அரசியல்வாதி
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது, வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட விரோத பொருள் இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம்...
இன்றைய (31.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படுவீர்கள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில்...
அவதானம் பெற்றோரே! யாழில் 7 வயது மருமகள் துஸ்பிரயோகம்! 17 வயது மாமா கைது!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் மாமா கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவருக்கு வயது 17. சிறுமியை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற மாமா, மீன் காட்டுவதாக கூறி, ஆட்களற்ற பற்றைக்குள் அழைத்து சென்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி இது பற்றி வீட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !
சாவகச்சேரி பகுதியில். இரண்டு பிள்ளைகளின் தாயார் சுகயீனம் காரணமாக தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜேந்திரா றாஜினி வயது 36 என்ற. 10 ,02வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு பரிதாபமாக. சாவகச்சேரி வைத்திய சாலையில் நேற்று. மாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
நீர்கொழும்பில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்து; உடல் சிதறி உயிரிழந்த இளைஞர்கள்! வீடியோ
நீர்கொழும்பு பொலவலனை பகுதியூடாக மோட்டார் சைக்கிள் இரண்டு அதிவேகமாக வந்து வளாகத்துக்குள் நுழைவதற்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு பிரைம் மூவர் வாகனம் மீது மோதியதில் இரு இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபேஸ்வரன் கனடாவில் மரணம்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமாவார்.கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் ,கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.
அவதானம் பெற்றோரே!! கிளிநொச்சியில் 3 மாணவர்களுடன் ஒரே நேரத்தில் மாணவி வகுப்பு அறைக்குள் கபடி விளையாட்டு !! வீடியோ பரவியுள்ளது!
கிளிநொச்சிப் பகுதிரயைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் 16 வயதுக்கும் குறைவான வயதுடைய மாணவி ஒருவரும் அதே வயதான அரைக் காற்சட்டை அணிந்த 3 மாணவர்களும் வகுப்பு அறைக்குள் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. குறித்த காட்சிகளை வெளியிட் ட சமூகவலைத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமூகவலைத்தளத்தில் வெளியாகிய அந்த வீடியோவை பலர் தரவிறக்கம் செய்து வைத்திருந்து வட்சப் மற்றும் வைபர் ஊடாக தமது நட்புகளுக்கு பகிர்ந்து வருவதாகத் தெரியவருகின்றது. குறித்த வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது....
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் கோர விபத்து – இருவர் பரிதாபமாக பலி!
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியில் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டு’வில் கோவில் அன்னதான உணவு சரியில்லை எனக் கூறியதால் மோதல்! வாள்வெட்டில் 4 பேர் காயம்!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அன்னதானம் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொண்ட இளைஞர் ஒருவர் உணவு சரியில்லை எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கியவர்களுக்கும் குறித்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுமார் ஏழு பேர் கொண்ட குழுவினர்...
கிளிநொச்சியில் 15 வயதான கெட்டிக்கார மாணவி மரணம்! ஏன் இந்த முடிவு?
கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் கற்றல் அடைவுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்ந்து வந்த குறித்த மாணவியின் திடீர் மரணம் பாடசாலைச் சமூகத்தையும், கிராம மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச்...










