சற்று முன் யாழிலிருந்து நுவரேலியாவுக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் வீழ்ந்தது!
யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த இருவரும்...
மட்டு’வில் பெண் அதிகாரியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மேயருக்கு விளக்கமறியல்!!
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை: தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா...
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் மேயரின் சடலம்!
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயரான 57 வயதுடைய எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்குள் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, இது உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர...
மட்டு’வில் நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுவன்!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராமத்தில் நேற்று ( 01/09/2026) செவ்வாய்க்கிழமை அன்று நீர் நிரம்பிய வாளியில் தவறுதலாக விழுந்த நந்தகோபன் கிஷோத் எனும் இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தனது வாசலின் முன் இருந்த நீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக தவறுதலாக விழுந்த குழந்தை மீட்கப்பட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம்...
ஒட்டிப் பிறந்த இரட்டை பெண்களில் ஒருவருக்கு திருமணம்!! மற்றவர் தனித்துள்ளார்!
ஒரே உடலைப் பகிர்ந்து கொண்டு பிறந்த இணைந்த இரட்டையர்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நாம் ஒருபோதும் முழுமையாக கற்பனை செய்து பார்க்க முடியாது.திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய முடிவு. ஆனால், உடல் அமைப்பு காரணமாக இருவரின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலையில், ஒருவர் திருமணம் செய்து கொண்டால் மற்றொருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரே உடலில் இணைந்து வாழும் ஒட்டிப்ப பிறந்த இரட்டையர்களான (Conjoined Twins) கார்மென் (Carmen) மற்றும் லூபிடா (Lupita) என்ற சகோதரிகளில் ஒருவர்...
மகளை A/L பரீட்சைக்கு ஏற்றிவிட்டு திரும்பிய குடும்பஸ்தர் வாள் வெட்டுக்கு இலக்காகி பலி!
அநுராதபுர தலைமையக பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக்...
கிளிநொச்சி விபத்தில் குடும்ப பெண்ணின் கால் துண்டிப்பு.
கடந்த சனிக்கிழமை(29) கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம் பெற்ற விபத்தில் குடும்ப பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த சுஜிகரன் சுசிகலா வயது 45 என்ற மூன்று பிள்ளைகளின் தாயின் இடது கால் இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது. A9 வீதியில் வவுனியாவில் இருந்து டிப்பர் வாகனம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்திலிருந்து வவனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்து, வலது பக்கம் திரும்ப முயற்சித்துள்ளார்.
தாய் வெளிநாட்டில்! அம்மம்மாவுடன் கதிர்காமம் போன 15 சிறுமிக்கு பஸ் ஏற்பட்ட காதல்! 29 வயது குடும்பஸ்தரால் துஸ்பிரயோகம்!
காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயது நபர் தலவாக்கலை பொலிசார்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளார். சிறுமி தலவாக்கலையில் உள்ள ஒரு தமிழ்ப் பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமி தனது பாட்டியுடன் கதிர்காமத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பேருந்தில் சந்தேக நபரை சந்தித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், இருவருக்கும் இடையே காதல் உறவு...
முல்லைத்தீவு வைத்தியசாலையில் தவறான மருந்து கொடுத்ததில் இளைஞன் பலி
சாதாரண சிகிச்சைக்காகச் சென்ற புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவர், முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் தொடர்பில் என்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியவரவில்லை. வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மருந்துச் சீட்டைச் சரியாக வாசித்துச் செயற்படாததே இத்தவறுக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த இளைஞனின் மருந்து சீட்டுக்கு பதிலாக வேறொருவரின் மருந்து சீட்டை பயன்படுத்தி இந்த இளைஞனுக்கு மருந்தை மாற்றி செலுத்தியதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையில் தாயின் மடியிலேயே அவ்விளைஞரின் உயிர்...
முல்லைத்தீவு தேவிபுரத்தில் மனைவியை வாளால் அறுத்துக் கொன்ற கணவன்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் வாள்வெட்டு – தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதலை குடும்பப்பெண்ணின் கணவனே நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் காயமடைந்து புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவிபுரம் பகுதியில் வசித்துவரும் குறித்த தம்பதியினரிடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட கடுமையான வாய்த்தர்க்கம் எல்லை மீறியதில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். “குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது...









