Home செய்திகள் யாழில் 8 வந்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தாயின் உறவுக்காரனுக்கு விளக்கமறியல்!

யாழில் 8 வந்து சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தாயின் உறவுக்காரனுக்கு விளக்கமறியல்!

யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார்.இது குறித்து சிறுமியின் தாயார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply