அண்மையில் வைத்தியராக நியமனம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையேற்ற வைத்தியர் ஒருவரின் நீண்ட நாள் காதலியான மற்றொரு பெண் வைத்தியர் நேசறி ரீச்சர் ஒருவரின் செயற்பாட்டால் தற்போது அவருடனான தொடர்பை துண்டித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த வைத்தியர் சிறுவயதில் யாழில் உள்ள நேசறி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். அவருக்கு அங்கு கல்வி போதித்த இளம் பெண் தற்போது 42 வயதான குடும்பப் பெண்ணாக திருமணம் முடித்து சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அந் நேரத்தில் தனது உறவினர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கு வந்த குறித்த பெண்ணை அடையாளம் கண்ட இளவயதான வைத்தியர் அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தான் சிறுவயதில் கற்பித்த மாணவன் தற்போது வைத்தியராக உள்ளதை நினைத்து சந்தோசப்பட்ட குறித்த குடும்பப் பெண் வைத்தியருடன் சென்று யாழில் உள்ள பிரபல விடுதியில் உணவருந்தியதுடன் அவருடன் செல்பியும் எடுத்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். அதனை வைத்தியரின் சமூகவலைத்தளத்திற்கும் ரக் செய்ததாக தெரியவருகின்றது.
இதன் பின்னர் குறித்த குடும்பப் பெண் யாழ்ப்பாணத்தில் நோய்வாய்ப்படும் உறவுகள் யாராவது இருந்தால் உடனே தனது மாணவனுக்கு தெரியப்படுத்தி அவர்களை போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற வைத்துள்ளார். எக்ஸ்ரே மற்றும் பல அறுவைச்சிகிச்சைகள் தொடர்பாக முன்பதிவு செய்வதற்கு பல தடவைகள் குறித்த வைத்தியரை தொடர்பு கொண்டு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார் அந்த ஆசிரியையான குடும்பப் பெண். இதனால் இளம் வைத்தியருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக ஒரு தடவை குறித்த வைத்தியரின் விடுதிக்குப் பொறுப்பான வைத்தியநிபுணரிடம் அந்த இளவயது வைத்தியர் கண்டபடி ஏச்சும் வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக வேறு ஒரு மாவட்டத்தில் வைத்தியராகக் கடமையாற்றி வந்த குறித்த வைத்தியரின் காதலிக்கு தகவல்கள் சென்றடைந்துள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கிடையில் அந்தச் ரீச்சர் தொடர்பாக கடும் கருத்து மோதல்கள் உச்சகட்டத்திற்கு சென்றதுடன் வைத்தியரின் காதலி சுவிஸ்லாந்தில் தற்போது வசிக்கும் அந்த ரீச்சரின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட வைத்தியரின் செல்பி புகைப்படத்தின் கீ்ழ் பேக் ஐடி ஒன்றிலிருந்து ”கள்ளக் காதலுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா? அப்பாவி ஒருவனா உனக்கு கிடைத்தான்?” என ஆங்கிலத்தில் தவறான கருத்துக்களை பதிவு செய்ததாக தெரியவருகின்றது.
அத்துடன் வைத்திய நண்பர்களின் வட்சப் குறுாப்பில் அந்த பதிவின் ஸ்கிறீன் சொட்டும் பதிவிடப்பட்டது. இதனையடுத்து காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கடுமையானதுடன் தற்போது குறித்த பெண் வைத்தியர் தனது காதலனின் தொடர்பை முறித்துவிட்டதாக வைத்தியத் தரப்புக்களிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பல வைத்தியர்களுக்கு அவர்களின் உறவுகள் மற்றும் நண்பர்களால் பெரும் தொல்லைகள் இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படுகின்றன. விரைவாக அறுவைச்சிகிச்சைகள் மற்றும் வேறு சிகிச்சைகள் பெற்றுக் கொள்வதற்காக அங்கு பணியாற்றும் பல வைத்தியர்களுக்கு அவர்களின் உறவுகள் மற்றும் நெருக்கமானவர்களால் கடும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கு பணியாற்றும் சில வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













